தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வந்த திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த பீஸ்ட் திரைப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களை அதிகமாக பெற்றுது.
இதனால் தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் விஜய் பீஸ்ட் திரைப்படம் பெரியளவில் வசூலில் சொதப்பியது.
மேலும் இப்படம் என்னதான் விமர்சனங்களை பெற்றாலும் அதை படக்குழுவும் ரசிகர்கள் கண்டுகொள்வது இல்லை.
உறுதி செய்த இயக்குனர் நெல்சன்
அதன்படி நேற்று பீஸ்ட் படக்குழுவுக்கு விஜய் அளித்த விருந்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நெல்சன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் நெல்சன் ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக இருக்கும் பதிவை லைக் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தின் வசூலை நெல்சனே சொல்லிவிட்டார் என கூறிவருகின்றனர்.