இரண்டாம் திருமணம் குறித்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாக சைதன்யா

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பிரிவதாக கடந்த வருடமே அறிவித்தனர். அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது அது.

அவர்கள் விவாகரத்துக்கு என்ன காரணம் என வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றம் சென்றபோது ‘பிரிவதால் சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால் என்றால் எனக்கும் மகிழ்ச்சி தான்’ என நாக சைதன்யா கூறி இருந்தார். அந்த வீடியோ வைரல் ஆனது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாக சைதன்யா வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. அது பற்றி சமந்தாவும் நேற்று கோபமான ட்விட் ஒன்றை போட்டிருந்தார், ‘என் அமைதியை அறியாமை என நினைத்துவிடாதீர்கள்’, ‘அன்புக்கும் expiry date இருக்கிறது’ என கூறி இருந்தார்.

நாக சைதன்யா தரப்பு விளக்கம்
இந்நிலையில் நாக சைதன்யா தரப்பு திருமண செய்தி பற்றி விளக்கம் அளித்து இருக்கிறது. நாக சைதன்யா இன்னும் சமந்தாவிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெறவில்லை. அதனால் தற்போது பரவி வரும் செய்தி உண்மையில்லை என தெரிவித்து உள்ளனர்.