கனடா செல்லும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

கனடாவுக்கு வரும் பயணிகள், கனடாவுக்குள் நுழைந்தபின் 14 நாட்களுக்கு மாஸ்க் அணியவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக அமெரிக்காவுக்குள் சென்று திரும்பினாலும் சரி, உலகம் முழுவதும் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பினாலும் சரி, பாரபட்சமே இல்லாமல் எல்லோருக்கும் ஒரே விதிதான்.

கனடாவுக்குள் நுழைந்தபின் 14 நாட்களுக்கு நீங்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்துதான் பொது இடங்களில் நடமாடவேண்டும்.

அத்துடன், கனடாவுக்கு வருபவர்கள் யாருடன் எல்லாம் நெருக்கமாக பழகுகிறார்களோ, அவர்கள் குறித்த விவரங்களை இரண்டு வாரங்களுக்கு கவனத்தில் வைத்துக்கொள்வதுடன், தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்படுகின்றனவா என்பதையும் கவனித்துக்கொள்ளவேண்டும் என கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில், கனடாவுக்கு வரும் முழுமையான கொரோனா தடுப்பூசி பெற்ற பயணிகள், இனி கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்குக் கொரோனா இல்லை என நிரூபிக்கும் ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டியதில்லை. ஆனாலும், அவர்கள் ArriveCan ஆப்பில், பயண தகவல் மற்றும் தனிமைப்படுத்தல் திட்டம் ஆகியவற்றை பூர்த்தி செய்துதான் ஆகவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.