பீட்ஸ் வசூலை முறியடித்து சாதனை படைத்த கே.ஜி.எப் 2

விஜய் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் யாஷின் கே.ஜி.எப் 2.

இந்நிலையில், கே.ஜி.எப் 2 திரைப்படம் உலகளவில் சுமார் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 7 கோடியும், கேரளாவில் ரூ. 6 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பீஸ்ட் திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ. 70 கோடி மேல் வசூல் செய்திருந்தாலும் கூட, கே.ஜி.எப் 2 திரைப்படம் அதனை அசால்ட்டாக முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.