பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்க இருக்கும் நடிகர் சிம்பு!

நடிகர் சிம்புவிற்கு பல ஆண்டுகளுக்கு பின் ப்ளாக் பஸ்டர் வெற்றியை மாநாடு திரைப்படம் தேடி தந்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில், சமீபத்தில் தான் கௌதம் மென் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் ECR பகுதியில் நடிகர் சிம்பு பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல கோடி செலவில் நடிகர் சிம்பு விரைவில் ECRல் தனக்கு பிடித்த மாதிரியான வீட்டை வாங்கவுள்ளார் என கூறப்படுகிறது.