முடி வளர்ச்சிக்கு உதவும் முள்ளங்கி ஹேர் பேக்…!!

தேவையான பொருட்கள்:

தயிர்- கால் கப்

முள்ளங்கி- 1

எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

செய்முறை:

முள்ளங்கியை நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.

சுத்தம் செய்த முள்ளங்கியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தயிர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

கடைசியாக எலுமிச்சை சாறை சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

இந்த பேக்கை தலைமுடியில் அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவைத்து காயவிட்டு முடியினை அலசலாம். இது முடிவளர்ச்சிக்கு நன்கு உதவும்.