இறக்குமதி மருந்துப் பொருட்களின் விலைகளை 20 சதவீதத்தால் அதிகரிக்க மருந்து இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே விலைகள் அதிகரிக்கப்பட்ட மருந்துப் பொருட்களுக்கு இது பொருந்தாது என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.