இளம் வயதில் முடி கொட்டுவதற்கான காரணம் என்ன தெரியுமா?

ஒரு சமயத்தில் தலைமுடி கொட்டி வழுக்கை விழுவது என்பது வயதானவர்கள் சந்திக்கும் பிரச்சினையாக இருக்கும். ஆனால் இன்று இளம் வயதினரும் வழுக்கை தலை பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

இளம் வயதில் தலை முடி கொட்டி வழுக்கை விழ காரணங்கள் என்ன?
மன அழுத்தம்
இளம் வயதில் முடி உதிர்தலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக மன அழுத்தம் உள்ளது. அதிகப்படியான மன அழுத்தம் உடலை பலவீனப்படுத்தி, மற்ற நோய்களுக்கும் ஆளாகிறது. முடி உதிர்வதைத் தடுக்க முடிந்தவரை மன அழுத்தத்தில் இருந்து மீள வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாடு
வைட்டமின் சி மற்றும் பி6 போன்ற வைட்டமின்கள் ஆரோக்கியமான முடியைப் பராமரிக்கவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும் அவசியம். இந்த வைட்டமின்கள் உடலில் குறைந்தால் முடி கொட்டும். முடி உதிர்தலுக்கு இரும்புச்சத்து குறைபாடும் முக்கிய காரணமாகும்.

ஆரோக்கியமற்ற உணவுமுறை
கொழுப்புகள் நிறைந்த மற்றும் வறுத்த, உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது பொதுவாக முடி உதிர்தல், முகப்பரு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தவறான உணவு முறையை பின்பற்றினால் முடி உதிர செய்யும்.

மரபியல்
மரபியல் வழியாக குடும்பத்தினருக்கு வழுக்கை பிரச்சினை இருந்தால், அதுவும் இளம் வயதில் தலைமுடி கொட்டுவதற்கு காரணமாக உள்ளது.

தலைமுடி ஸ்டைல்
தலைமுடியை ஸ்டைலாக வைத்து கொள்ள பலரும் செயற்கையான முறையை நாடுவார்கள். அதாவது, சூடான கருவிகள், கடுமையான இரசாயன சிகிச்சைகள் மற்றும் டைகள் ஆகியவற்றுடன் ஸ்டைலிங் செய்தால் தலைமுடி சேதம் மற்றும் இழப்பை துரிதப்படுத்தும்.