சுவையான பருப்பு துவையல் செய்வது எப்படி?

பருப்பில் புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ளதால் உடல் எடை குறைக்க பலருக்கும் உதவுகிறது.

துவரம் பருப்பில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. அப்படிப்பட்ட பருப்பில் துவையல் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
எண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

பெருங்காயம் – 1 துண்டு

உப்பு – தேவைக்கேற்ப

துவரம் பருப்பு – 50 கி

தேங்காய்த் துண்டு – 3

கடலைப் பருப்பு -50 கிராம்

செய்முறை விளக்கம்
கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து துவரம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயம், தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதனுடன் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்க வேண்டும் அனைத்து நன்றாக வறுத்த பின், வறுத்த பொருட்களை ஆற வைத்து சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக அரைத்தாலே பருப்புத் துவையல் தயாராகிவிடும்.

இதில் முக்கியமாக கார குழம்பு, இட்லி, சப்பாத்தி வகைகளுக்கு பருப்பு துவையல் மிகவும் சுவையாகவும், ஏற்றதாகவும் இருக்கும்.