நயன்தாராவால் அஜித்திற்கு கிடைத்த நன்மை

AK 62
அஜித்துடைய நடிப்பில் தற்போது உருவாகவுள்ள திரைப்படம் AK 61. இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தை தொடர்ந்து முதல் முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 நடிக்கிறார் அஜித்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம், லைக்கா தயாரிக்கிறது. இப்படத்திற்காக நடிகர் அஜித்துக்கு ரூ. 100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.

இந்நிலையில், AK 62 படத்திற்காக அஜித்துக்கு ரூ. 100 கோடி சம்பளம் தருவதற்கு நடிகை நயன்தாரா தான் காரணமாம். ஏனென்றால், இப்படத்தை முதன் முதலில் தயாரிப்பதாக இருந்தது சத்யஜோதி நிறுவனம் தானாம்.

நயன்தாராவால் உயர்ந்த அஜித்தின் சம்பளம்

ஆனால், அவர்கள் அஜித்துக்கு ரூ. 81 கோடி தான், சம்பளமாக தருவதாக பேசியுள்ளார்கள். இதனை கேள்விப்பட்ட நயன்தாரா, உடனடியாக லைக்கா நிறுவனத்திற்கு கால் செய்து, அஜித்துக்கு ரூ. 100 கோடி சம்பளம் கொடுத்தால், நாம் ஒரு படம் பண்ணலாம் என்று பேசியுள்ளார்.

அஜித் என்றால், ரூ. 100 கோடி என்ன, ரூ. 105 கோடி கூட தரலாம் என்று லைக்கா கூறி, இந்த படத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இப்படி தான் Ak 62 படம் அமைந்துள்ளது