கொழும்பில் இருந்து அமெரிக்கா செல்ல முயற்சித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்த இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பத்தரமுல்லைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போலியான அமெரிக்க விசா வைத்திருந்ததற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பெண், 500000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறும் என நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.