ரஷ்ய உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கும் உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யாவின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊடகப் பிரமுகர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகி, உக்ரைன் நாடு மீதான படையெடுப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு, உக்ரைன் ஜனாதிபதி நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைனிய தலைநகர் கீவில் இருந்து இரவு நேர உரையின் போது ஸெலென்ஸ்கி இந்த கோரிக்கையை விடுத்தார்.

“நீங்கள் பதவியில் இருந்தால், நீங்கள் போரை எதிர்க்கவில்லை என்றால், சர்வதேச சமூகம் உங்களின் அனைத்தையும் பறித்துவிடும்” என்று ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

“நீங்கள் பல ஆண்டுகளாக சம்பாதித்த அனைத்தும் பறிக்கப்பட்டு விடும்.

இது ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

“ரஷ்யாவில் அதிகாரத்தின் நான்காவது கிளையில் உள்ள நீங்கள், ரஷ்ய பிரசாரத்திற்காக தொடர்ந்து பணியாற்றினால், நீங்கள் அதிக ஆபத்தில் உங்களை ஈடுபடுத்துகிறீர்கள் என்றே அர்த்தப்படும்.

“வெளியேறுங்கள்! ஒரு சில மாதங்கள் வேலை இல்லாமல் இருப்பது உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சர்வதேச துன்புறுத்தலை விட நிச்சயமாக சிறப்பானதாக இருக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி, ரஷ்யாவின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊடகப் பிரமுகர்களிடம் கேட்டுள்ளார்