இலங்கை அணியில் ருதுராஜை நீக்கியமைக்கான காரணம் இதுதான்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும், 2 டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளது.

இதில், முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்தப்போட்டியில், ருதுராக் கெய்க்வாட் இடம்பெறவில்லை.

இதனால் ரசிகர்கள் ருதுராக் எங்கே என கேட்டவாறு விமர்சனத்தை எழுப்பினர். ஏனென்றால், கடந்த சில போட்டிகளாகவே இந்திய அணியில் ருதுராஜ் இடம்பெற்றாலும், போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுவிடுகிறது.

ஒரு பக்கம் ரோகித் சர்மா இஷான் கிஷனுக்கே வாய்ப்புகளை வழங்கி வருகிறார். இதனால், கடும் விமர்சனத்தை ரசிகர்கள் எழுப்பி வந்தனர். அதனால், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் கடைசி டி 20 போட்டியில் வாய்ப்பு அளித்தனர்.

ஆனால், ருதுராஜுக்கு அந்த போட்டி சரியாக அமையவில்லை. இதனிடையே இலங்கை பயணத்திலும் இடம்பிடித்து இருந்தார். ஆனால், முதல் டி20 இடம்பெறாததால், விமர்சனத்திற்கு பதிலளித்த ரோகித் சர்மா, “ருதுராஜுக்கு இன்று வாய்ப்பு கொடுக்கலாம் என்றுதான் எண்ணியிருந்தோம். ஆனால், அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால், இன்றைய போட்டியில் களமிறங்க மாட்டார் “எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், காயம் காரணமாக இலங்கை தொடரில் இருந்து வெளியேறிய அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் மாற்று வீரராக சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வரும் ருதுராஜுற்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என முன்னாள் வீரர்களும் கருத்துகளை கூறி வருகின்றனர்.