விஜய்யுடன் இணையும் விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த மாபெரும் நட்சத்திரங்களில் ஒருவர்.

உடல்நிலை சரியில்லாமல் போனதன் காரணமாக நடிகர் விஜயகாந்தால், தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாமல் போனது.

ஆனால், இன்று விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், ரமணா, தவசி, நரசிம்மா உள்ளிட்ட பல படங்கள் நம் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், பல வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நடிகர் விஜயகாந்த் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆம், விஜய் ஆண்டனி நடித்து வரும் மலைப்பிடிக்காத மனிதன் படத்தில் முதல் முறையாக விஜய் ஆண்டனியுடன் இணைந்து விஜயகாந்த் நடித்துள்ளாராம்.

மேலும், இப்படத்தில் விஜய் ஆண்டனி, விஜயகாந்த் மற்றும் சரத்குமார் என மூன்று முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.