சக்கரை நோயை விரட்டும் கோதுமை

நீரிழிவு நோய்க்கு கோதுமைதான் சிறந்த தீர்வா என்ற கேள்வியை முன்வைத்து அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார் சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபருக் அப்துல்லா.

அரிசிக்கு பதில் கோதுமை சாப்பிட்டால் சர்க்கரை குறையும் என்பதே இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக்

கோதுமை Vs அரிசி எதில் அதிக மாவுச்சத்து (carbohydrate) இருக்கிறது ?

100 கிராம் கோதுமையில் 71 கிராம் கார்ப்ஸ் இருக்கிறது அதே 100 கிராம் அரிசியில் 79 கிராம் கார்ப்ஸ் இருக்கிறது.

சரி கலோரி வகையில் கோதுமை எப்படி என்று பார்ப்போம் 100 கிராம் அரிசியில் 358 கிலோ கலோரி கிடைக்கிறது 100 கிராம் கோதுமையில் 339 கிலோ கலோரி கிடைக்கிறது.

ஆக கலோரி கணக்கிலும் மாவுச்சத்து கணக்கிலும் அரிசிக்கு கோதுமை சிறிதும் சளைத்ததல்ல.

பிறகு ஏன் கோதுமை பரிந்துரைக்கப்படுகிறது???

தமிழர்களுக்கு அரிசி பிடிக்கும் ஆனால் கோதுமை அவ்வளவாக பிடிக்காது. ( என்று நினைத்தது தப்பாகிவிட்டது) அரிசியை விட கோதுமையை சாப்பிடச் சொன்னால் குறைவாக சாப்பிடுவார்கள். அதனால் சர்க்கரை கன்ட்ரோல் ஆகும் என்ற நினைப்பில் “கோதுமை” பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் நடந்தது என்ன?

கோதுமையை வடக்கத்திய சகோதரர்களை விட வெளுத்து வாங்கி வருகிறோம் கூடவே அரிசி சாப்பிடுவதும் குறைந்தபாடில்லை.

சராசரி தமிழன் ஒரு வருடத்திற்கு 127 கிலோ அரிசி சாப்பிடுகிறான். இது இந்திய சராசரி அளவை விட மிக அதிகம்( இந்திய சராசரி 77 கிலோ/வருடத்துக்கு)

இன்னும் கோதுமையில் உள்ள “க்ளூடன்” (gluten) ஒவ்வாமையை உருவாக்கவல்லது. இதற்குப் பெயர் க்ளூடன் ஒவ்வாமை(gluten intolerance).

இந்த ஒவ்வாமை நமக்கு குடல் சார்ந்த தன்எதிர்ப்பு நோய்களையும்(celiac disease) இதய நோய்களையும் உருவாக்க வல்லது.