பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அநியாயமாக தண்டிக்கப்படும் அப்பாவிகள் நாளை நாட்டுக்கு ஆபத்தானவர்களாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் அநியாயமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.







