பருப்பு வகைகளை எவ்வாறு சமைக்க வேண்டும் தெரியுமா?

உணவு சமைக்கும் போது பருப்புகளை ஊறவைப்பது வழக்கம். விரைவாக வேக வேண்டும் என்பதற்காக பருப்புகள் ஊறவைக்க படுவதாக கூறுவார்கள்.

ஆனால் இதில், சில ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பருப்பு வகைகளில் நார்சத்துள் உடலுக்கு நன்மைபயக்க கூடிய வைட்டமின்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.

இவற்றை அப்படியே சாப்பிடும் போது அஜீரணம் ஏற்படும்.

அதுமட்டுமின்றி பருப்பு மற்றும் கொட்டை வகைகள் எளிதில் ஜீரணமாகது.

இதனை ஊறவைத்து சமைக்கும் போதும் சாப்பிடும் போதும் எளிதில் ஜீரணமாகும்.

ஊறவைக்காமல் அவற்றை சாப்பிடும் போது மலசிக்கல், உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

மேலும் அவற்றில் இருந்து கிடைக்கும் வைட்டமின்கள் உறிஞ்சப்படாமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

பருப்புகளை ஊற வைப்பதன் மூலம் வாயு உருவாக்கும் நச்சுகள் குறைந்து விடும் எனவும் கூறப்படுகிறது.

பருப்பு மற்றும் கொட்டை வகைகளை இரண்டு மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை ஊற வைக்கலாம்.ஊறிய பின் இரண்டு முதல் மூன்று வரை புதிய நீரைக் கொண்டு அந்தப் பருப்புகளை சுத்தமாக கழுவ வேண்டும்.