இரவில் பிரியாணி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

வேலைக்குப் போய்விட்டு வந்ததும் வீட்டில் சாப்பிட பிடிக்கவில்லை என்றாலோ அல்லது சமைக்க நேரமில்லை என்றாலோ நாம் முதலில் ஆர்டர் செய்வது பிரியாணியாகத் தான் இருக்கிறது.

குறிப்பாக இரவு உணவுக்கு பிரியாணியைத் தேர்ந்தெடுப்பது அதிகமாகியிருக்கிறது.

ஆனால் இரவு நேரங்களில் பிரியாணி சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல.

இரவில் பிரியாணி சாப்பிட்டால் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகும். ஏன் தவிர்க்க வேண்டும் ஆகியவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

அதிக கலோரிகள் கொண்ட பிரியாணியை இரவில் சாப்பிடும் போது உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த பிரச்சினை இல்லாதவர்களுக்கு விரைவில் வந்துவிடும்.

பிரியாணியை வயிறு நிறைய சாப்பிடும்போது ஜீரணம் மிக மெதுவாக நடக்கும். இதனால் அஜீரணக் கோளாறு ஏற்படுவதோடு அடுத்த நாள் காலை வரை உடலும் மிகச் சோர்வாகவே இருக்கும்.

இரவு நேரத்தில் இறைச்சி, நெய், கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி ஆகியவற்றைச் சேர்த்து சமைக்கப்படுகிற பிரியாணி இயல்பாகவே கலோரிகள் அதிகமாக இருக்கும்.

மேற்கண்ட ஊட்ச்சத்துக்கள் யாவும் கொழுப்பாகவும் சர்க்கரையாகவும் மாறக் கூடியவை. இதில் அதிக கலோரி அளவை எடுத்துக் கொள்ளும் உடலில் கெட்ட கொலஸ்டிராலின் அளவும் அதிகரிக்கும்.

இரைப்பை அழற்சி போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

பிரியாணி சேர்க்கப்படும் அதிகப்படியான மசாலாவால் வயிற்றுப்புண் போன்ற குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.