மூச்சு முட்ட வைத்த சாக்‌ஷி.!

கோலிவுட்டில் நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் காலா மற்றும் தல அஜித்தின் விசுவாசம் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சாக்ஷிக்கு அரண்மனை 3, சின்ரெல்லா ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது சாக்ஷி நான் கடவுள் இல்லை, தி நைட் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அன்றாடம் போட்டோ ஷூட் நடத்தி சாக்ஷி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம். அவ்வப்போது தனது சந்தோஷமான மற்றும் துக்கமான விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொள்வார்.

சமீபத்தில் அவர் தனது தந்தைக்காக சொகுசு கார் வாங்கியது குறித்து ஒரு பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அந்த வகையில், தற்போது அவர் கவர்ச்சி தூக்கலாக வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.