பிக்பாஸ் வீடினுள் புலம்பும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்கள் பிரம்மாண்டமாக பார்க்கும் ஒரு ஷோ. 5வது சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஜனவரி 15ம் தேதி முடிவுக்கு வந்தது.

அதற்குள் பிக்பாஸ் குழு, பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நேற்று நிகழ்ச்சியை தொடங்கி விட்டனர்.

5 சீசனில் வந்த போட்டியாளர்கள் தான் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ளார், இவர்கள் எல்லோரும் என்னென்ன அட்டகாசம் செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

இந்த அல்டிமேட் ஷோ ஸ்பெஷல் என்னவென்றால் 24 மணிநேரமும் Disney Plus Hotstarல் ஒளிபரப்பாகிறதாம்.

இதனால் காலை முதல் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். காரணம் என்னவென்றால் காலை 2 மணி நேரம் சினேகன் நடப்பதை மட்டுமே காண்பித்துள்ளார்களாம், மற்றவர்கள் அனைவரும் தூங்குகிறார்கள்.

ரசிகர்கள் அப்போது 24 மணி நேரம் இப்படி தான் போகுமா என புலம்ப ஆரம்பித்துள்ளனர்.