ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி 2 ஆரம்பிக்கப்பட இருக்கும் பல்கலைக்கழங்கள்

பெரும்பாலானபகுதிகளில் ஆண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளைமட்டுமே மீண்டும் திறக்கப்படும் நிலையில், மாணவிகள் வகுப்பிற்கு திரும்புவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அங்கு பல்கலைக்கழகங்கள்,பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் காபூலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷேக் அப்துல் பாக்கி ஹக்கானி,வெப்பம் மிகுதியாக இருக்கும் மாகாணங்களில் பிப்ரவரி 2 முதலும், குளிர் நிலவும் மாகாணங்களில் பிப்ரவரி 26 முதல் பல்கலைக் கழகங்கள் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எனினும் மாணவிகள் பள்ளிக்கு சென்று பாடம் படிக்க அனுமதிக்கப்படுமா என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் சில தனியார் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதில் மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆட்சிப் பொறுப்பிற்கு பின் ஆப்கானிஸ்தானில் மாணவிகளுக்கு தனி வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்படும் என்று தலிபான் அதிகாரிகள் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.