பிரான்சில் அதிகரிக்கும் கொரோனோ தொற்று!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.30 லட்சத்தைக் கடந்தது.

உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் டிசம்பர் மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமைக்ரான் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.88 கோடியைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.30 லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.