இன்றைய ராசிபலன்கள் (30.01.2022)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி – 30 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்பு…..

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். இன்று சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்காது. வியா பாரம் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர் களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். ஆறுமுகப் பெருமானை வழிபட அல்லல்கள் நீங்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். எடுத்த காரியத் தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களைப் பற்றித் தவறாகப் பேசிய உறவினர்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை கள் மறையும். அம்பிகை வழிபாடு அளவற்ற மகிழ்ச்சி தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்கு கள் நீங்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்
கடக ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் வகையில் சில சங்க டங்கள் ஏற்பட்டாலும் அதனால் பெரிய பாதிப்பு எதுவுமிருக்காது. சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் இருக்கும். இன்று நீங்கள் துர்கையை வழிபடுவதன் மூலம் நன்மைகளை கூடுதலாகப் பெறலாம்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணிகள் அதிகரிக் கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணி யாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

கன்னி
கன்னி ராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க் கைத்துணையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற் படும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். ஆனால், லாபம் எதிர் பார்த்தபடி இருப்பது மகிழ்ச்சி தரும். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் மனக் குழப்பங்கள் நீங்கி, அமைதி பெறலாம்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்
துலா ராசி அன்பர்களே!

மனதில் குழப்பங்கள் நீங்கி உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அரசாங்க அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி இழுபறியானாலும் கிடைத்துவிடும். லட்சுமி நரசிம்மரை வழிபட முயற்சிகள் சாதகமாக முடியும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர் மூலம் கிடைக்கும் செய்தி உங்களை உற்சாகப்படுத்துவதாக இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். மகான் ராகவேந்திரரை வழிபடுவதன் மூலம் மனஅமைதி பெறலாம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

தனுசு
தனுசு ராசி அன்பர்களே!

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

மகரம்
மகர ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்பட்டு திக்கு முக்காட வைக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறி, அனு கூலமாக முடியும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரி டும். முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சங்கடம் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பம்
கும்ப ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். காரியங்கள் அனுகூலமாகும். உங்கள் பொறுப்புகளை வாழ்க்கைத்துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. அவருடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையாக நடந்து கொள்வது அவசியம். வியாபாரம் எதிர்பார்த்ததுபோலவே நடைபெறுவது மகிழ்ச்சி தரும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் தெய்வ வழிபாடு நடத்தும் வாய்ப்பு ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம்
மீன ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு சகோதரர்களால் எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு நவீன டிசைனில் புதிய ஆடைகளை வாங்கும் யோகம் ஏற்படும். சிலருக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். தந்தையின் விருப் பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத் தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். லாபமும் அதிகரிக்கும். குலதெய்வத்தை மானசீகமாக வழிபடுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறலாம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.