உடலில் உள்ள கொழுப்பினை விரைவில் போக்குவது எப்படி?

பொதுவாக இன்றைய காலத்தில் பலர் கொலஸ்ட்ரால், தொப்பை பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற உணவு முறையை பின்பற்றுவது தான்.

இத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். இதனால் பல உடல்நல கோளறுகளை சந்திக்ககூடியதாக அமைகின்றது.

இவற்றிலிருந்து விடுபட இயற்கை வழிகள் பல உள்ளன. அதில் கொழுப்பை குறைக்க ஆரோக்கியம் மிகுந்த கஞ்சிகளை கூட எடுத்து கொள்ளலாம். ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு கஞ்சி மிக முக்கியமான பானம் ஆகும்.

இது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் பெருமளவு உதவுகிறது.

அந்தவகையில் கொழுப்பை குறைக்க கூடிய கஞ்சி ஒன்றை இங்கே எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கைக்குத்தல் அரிசி – ஒரு கப்
தண்ணீரி – எட்டு கப்
சூரியகாந்தி எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
தேன் நாள் – ஸ்பூன்
செய்முறை

நீரை கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் அரிசியை சேர்த்து மேலும், நன்கு கொதிக்க விட வேண்டும்.

நீர் நன்கு கொதித்த பிறகு நெருப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டு கொண்டு மூடி 15 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். அரிசி நன்கு வெந்த பிறகு குளிர செய்ய வேண்டும்.

பிறகு ஒரு பிளென்டரை எடுத்து அதில் வெந்த சாதத்தை ச்மூதியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து மேலும் அரைக்க வேண்டும்.

காலை மாலை என இரண்டு வேலை இந்த அரிசி பால் கஞ்சி குடிக்க வேண்டும். மேலும், இதை காற்றுப்புகா வண்ணம் கண்ணாடி பாத்திரத்தில் அடைத்து வைக்க வேண்டும். இதை மூன்று நாட்கள் குடித்த வர நல்ல முன்னேற்றம் காண முடியும்.