பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பாவனி பதிவிட்ட முதல் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக பாவனி இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களிடம் பேசினார் .

ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் வெளியிப்படையாக பதிலளித்தார். தனக்கு உடல்நிலை ஒத்துக் கொள்ளாததால் உடனடியாக ஐதராபாத் வந்து விட்டதாக கூறினார்.

உள்ளே இருக்கும் போது வெளியில் என்னை எப்படி பார்ப்பார்கள்.

எனக்கு மக்கள் ஆதரவு வழங்குவார்களா என குழப்பத்தில் இருந்தேன். ஆனால் வெளியில் வந்ததும் நீங்கள் கொடுத்த ஆதரவை பார்த்து அசந்து போய் விட்டேன்.

ஓடிடி.,யில் பங்கேற்கும் எண்ணம் இல்லை என்றார். தொடர்ந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், அனைவரின் அன்பு, அக்கறை, ஆதரவிற்கு நன்றி. நான் இதை எதிர்பார்க்கவில்லை.

எனக்கு யாரும் இல்லை என நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் எனக்கு நிறைய பேர் கிடைத்துள்ளார்கள். நீங்கள் தான் எனது முக்கிய குடும்பம் என நெகிழ்ச்சியாக பேசி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் trending queen என பாவனியை புகழ்ந்துள்ளனர்.