உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க தீர்மானித்த பிரிட்டன்

உக்ரைனுக்கு ஆதரவாக கனடா தனது சிறப்பு படைகளை அனுப்பிய நிலையில் பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை வழங்க பிரிட்டன் தீர்மானித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அதன்படி உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதையடுத்து, மேற்கத்திய நாடுகளுக்கு உதவுமாறு உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, உக்ரைனுக்கு சிறிய ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.