நடிகர் தனுஷ் அவரது மனைவியை பிரிவதாக டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ் இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.
இவ்வாறு சினிமாவில் சக்சஸ்புல்லான நடிகராக வலம்வரும் தனுஷ் சொந்த வாழ்வில் தோல்வியை சந்தித்துள்ளார். 18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி தற்போது பிரிந்துள்ளனர்.
இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து பிரிவதாக நேற்று இரவு திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டு கோலிவுட்டையே பரபரப்பாக்கினர். சினிமாவில் தனுஷின் வளர்ச்சிக்கு திறமை ஒரு காரணமாக இருந்தாலும் இன்னொரு புறம் ஐஸ்வர்யாவும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இவர்களுக்கு சில மாதங்களாகவே அடிக்கடி மன கசப்புகள் ஏற்பட்டுள்ளது. அது குறிப்பாக டிசம்பர் மாதத்தில் இருவருக்குள் பயங்கர பிரச்னையாக வெடித்துள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 12ஆம் திகதி நடந்த ரஜினி பிறந்தநாள் விழாவில் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா அவரது கணவர், மகன் என அனைவரும் பங்கேற்றனர்.
ஆனால் தனுஷ் மட்டும் கலந்துகொள்ளவில்லை. தனுஷ் அவரது மாமனார் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாததற்கு கணவன்-மனைவி இடையே இருந்த பிரச்சனை தான் காரணம் என்பது போல் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது.







