அரிசியின் விலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நாள் முதல் வர்த்தகர்கள் விரும்பியவாறு அரிசிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் (P.K Ranjith) தெரிவித்துள்ளார்.

அதேவேளை வடக்கு, வடமத்திய மாகாணங்களிலிருந்து நெல் அறுவடை கிடைப்பதன் காரணமாக இந்த வாரம் அரிசி விலைகளில் குறைவு ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு நாட்டில் இருப்பதாகவும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.