சென்னை: பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் கோப்பையை அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட ராஜூ தட்டிச் சென்றுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்து 5வது சீசன் நேற்று நிறைவு பெற்றது. 18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் வழக்கம்போல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் 2 போட்டியாளர்கள் வைல்டு கார்ட் என்ட்ரியாக வந்தனர். மற்ற சீசன்களை விட, இந்த சீசனில் பிக்பாஸ் வழங்கிய டாஸ்க்குளாலும், போட்டியாளர்களிடையே நடந்த சண்டைகளாலும் நிகழ்ச்சி சூடுபிடித்தது. இறுதியில் ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் என 5 போட்டியாளர்கள் பைனலிஸ்டுகளாக உள்ளனர்.
இந்நிலையில், நேற்று டெலிகாஸ்ட் ஆன பைனல் எபிசோடில் பிக்பாஸ் சீசன்-5க்கான வெற்றியாளர் கோப்பையை ராஜு தட்டிச் சென்றுள்ளார். வெற்றிப் பரிசுடன் ராஜூ நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், 2வது இடத்தை பிரியங்கா, 3வது இடத்தை பாவனி, 4வது இடத்தை அமீர், 5வது இடத்தை நிரூப் ஆகியோர் பெற்றுள்ளனர். இந்நிலையில், மக்களிடம் இருந்து அதிகமான வாக்குகளை பெற்று, ராஜு டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் ராஜு. டைட்டில் வின்னர் ஆகியுள்ள ராஜுவிற்கு ரூ. 50 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 வாரங்கள் இருந்த ராஜுவிற்கு வாரத்திற்கு ரூ. 1 லட்சத்தி 50 ஆயிரம் சம்பளம் என்ற கணக்கில், 16 வாரங்களுக்கு ரூ. 24 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பரிசு தொகை ரூ. 50 லட்சமும், சம்பளம் ரூ. 21 லட்சத்தையும் சேர்த்து ரூ. 74 லட்சத்தை தட்டி சென்றுள்ளார் ராஜு என கூறப்படுகிறது.
என்னதான் ராஜு டைட்டில் வின்னராக இருந்தாலும், இந்த சீசனில் அவரைவிட அதிகம் சம்பளம் பெற்றது பிரியங்கா தான். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்ததால், இவருக்கு ஒரு வாரத்துக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 16 வாரத்துக்கு ரூ.32 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.







