G Pay மூலம் தங்கம் வாங்குவது மற்றும் விற்ப்பது எவ்வாறு என தெரியுமா?

நவீன தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட நிலையில், ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள், இதனால் பணப்பரிவர்த்தனையும் ஆன்லைனிலேயே நடக்கிறது.

இதற்காக கூகுள் பே செயலியை நீங்கள் பயன்படுத்தினால், அதன் மூலம் தங்கம் வாங்குவதையும், விற்பதையும் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

கூகுள் பே மூலம் தங்கம் வாங்கினால், 99.99 சதவிதம் 24 கேரட் தங்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் வாங்கும் தங்கம், Gold Accumulation Plan என்ற திட்டத்தின் கீழ், MMTC-PAMP India Pvt. Ltd என்ற நிறுவனத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

கூகுள் பே தளத்தின் மூலமாக தங்கம் வாங்கவும், விற்கவும் விரும்பினால் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றவும்.

1. கூகுள் பே செயலியைத் திறந்து, `நியூ’ என்ற பட்டனை அழுத்தவும்.

2. `கோல்ட் லாக்கர்’ என்று தேடி, அந்தப் பகுதிக்குச் சென்ற பின்னர், `Buy’ என்பதை அழுத்தி, தங்கம் வாங்கலாம்.

தற்போதைய சந்தை மதிப்பில், வரிகள் உள்பட, தங்கத்தின் விலை காட்டப்படும். தங்கம் வாங்கத் தொடங்கிய அடுத்த 5 நிமிடங்களுக்கு விலை எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருக்கும்.

3. தங்கம் வாங்குவதற்கு அதிகபட்ச அளவு எதுவும் நிர்ணயம் செய்யப்படாத போதும், நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை தங்கம் வாங்கலாம்.

4. தங்கத்தை வாங்கிய பின்னர் உங்களது லாக்கரில் தங்கம் சேமிக்கப்படும், பரிவர்த்தனை முழுமையாக முடிந்த பின்னர் அதனை ரத்து செய்ய முடியாது, ஆனால் சந்தையின் மதிப்பில் அதை விற்றுக்கொள்ளலாம்.