மூட நம்பிக்கையால் தமிழகத்தில் பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழகத்தின் கரூர் மாவட்டம் – லாலாப்பேட்டை அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கோகிலா.
45 வயதாகும் இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த நடராஜனுக்கும் 12 வருடங்களுக்கு முன்னரே திருமணம் நடந்துள்ளது.
இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
குழந்தைபேறு வேண்டி வேடசந்தூரில் உள்ள புற்றுகோயிலுக்கும் போய் வாரம் ஒருமுறை வழிபாடு செய்து வந்துள்ளார்.
அப்போது திடீர் என கோகிலாவுக்கு வயிறு வலி ஏற்பட்டு பிரசவம் ஆனதற்கான அறிகுறிகள் தென்பட்டதாம்.
உடனே சாமியார், கோகிலாவின் வயிற்றில் நாகபாம்பு வளர்வதாகவும், நிறைந்த பௌர்ணமியில் நள்ளிரவு 12.20க்கு நாகபாம்பு பிறக்கும் என அருள்வாக்கு சொல்லியுள்ளார்.
பௌர்ணமியில் கோகிலா வீட்டு முன்பு கூட்டம் கூடியுள்ளது. ஆனால் கோகிலாவுக்கு பிரசவ வலியோ, நாகப்பாம்பு பிறக்கவோ இல்லை.
உடனே போலீஸார் 108 ஆம்புலன்ஸில் கோகிலாவை ஏற்றிக்கொண்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவரை சோதித்ததில் கோகிலா கர்ப்பமாகவே இல்லை என தெரிய வந்தது.
நம்பிக்கை என்பதற்கும், மூட நம்பிக்கைக்கும் சின்ன வித்யாசம் தான். சில வேலை அது பலரின் வாழ்க்கையில் எப்படியான ஏமாற்றத்தினை கொடுக்கும் என்பதற்கு இது எடுத்து காட்டு.