தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிய திரைப்படம் தான் புஷ்பா. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் உம் சொல்றியா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் படம் குறித்த விமர்சனங்களில் பெரும்பாலான ரசிகர்கள் சமந்தாவின் கவர்ச்சி நடனத்தை காணவே தியேட்டருக்கு வந்ததைப் போல பேட்டி அளித்து இருக்கின்றனர். அத்துடன் சமூக வலைதளங்களிலும் சமந்தாவின் ஒரு பாடலுக்காக தான் இந்த முழு படத்தையும் பார்த்ததாக மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றது.
View this post on Instagram
இந்த நிலையில் ஓ சொல்றியா பாடல் உருவான விதம் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.







