கோலிவுட்டில் சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக நிறைய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர்தான் ஆலியா மானசா. இதன்பின்னர் விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இவர் நடித்த செம்பா கதாபாத்திரம் மிகப்பெரிய வைரல்.
சமூகவலைதளங்களில் இந்த கதாபாத்திரம் குறித்து மீம்ஸ்கள் போடப்பட்டதால் ஆலியா மானசா பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தார். இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவினை ஆலியா காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு அழகான குட்டி மகள் இருக்கின்றார்.
View this post on Instagram
.
தற்போது நடிகர் சித்துவுக்கு ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். அதில் மிகவும் பிற்போக்குத்தனமான மாமியாருடன் ஐபிஎஸ் அதிகாரியாக போகும் ஆலியா மானசா அனுபவிக்கும் கொடுமைகள் போன்றவை இல்லத்தரசிகளுக்கு மிகவும் சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும்.
இதில் முக்கிய வில்லியாக இருப்பவர் அர்ச்சனா தான். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா எப்போதும் எதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது அர்ச்சனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.







