ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் நுரையீரல் பாதிப்பு குறைவு – வெளியான தகவல்

ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் அதிக அளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக அளவில் மட்டுமின்றி இந்தியாவில் வேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இதனால் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்டா உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்றுகளை ஒப்பிடும்போது ஒமைக்ரானின் பாதிப்பு தன்மை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஜப்பானைச்சேர்ந்த விஞ்ஞானிகள் எலிகள் மீது ஒமைக்ரான் பாதிப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.

அதில் ஒமைக்ரான் தொற்று மூலம் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, எடை குறைவு மற்றும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

கொரொனாவின் பிற உருமாறிய வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் எலிகளின் நுரையீரலில் இருந்த ஒமைக்ரான் பாதிப்பு பத்தில் ஒரு மடங்கு குறைவாக இருந்தது என ஆய்வில் கூறப்பட்டிருந்தது.

ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் மனித திசுக்கள் மீதான ஆய்வறிக்கையும் ஒமைக்ரான் பாதிப்பு குறைவாக இருப்பதையே சுட்டிக்க்காட்டுகிறது.

12 நுரையீரல் மாதிரிகளில் மேற்கொண்ட ஆய்வு கொரோனாவின் முந்தைய உருமாற்றங்களைக் காட்டிலும் ஒமைக்ரானின் பரவல் மெதுவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

ஒமைக்ரான் நுரையீரலின் கீழ்ப்பகுதியில் அதிகமாக பாதிக்காததால் அதிக உயிரிழப்புகளை ஏற்படாது என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். எலிகளின் மீதான ஆய்வில் ஒமைக்ரானின் பாதிப்பு அறிகுறிகள் குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதன்மூலம் ஒமைக்ரான் தொற்றால் நுரையீரல் பாதிப்பு ஏற்படாது என்ற தகவல் உலக மக்களை சற்று ஆறுதலில் ஆழ்த்தியுள்ளது.