உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தவறி கூட பாலை குடித்து விடாதீர்கள்!

பாலில் அதிக புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். மேலும் இதில் கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமுள்ளது.

பொதுவாகவே உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மிக பெரிய சவாலாக இருப்பது அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் தான். வெறும் உடற்பயிற்சியை மட்டும் செய்வதால் உடல் எடை குறையாது.

அந்தவகையில் உடல் எடையை குறைப்போர் பால் குடிக்கலாமா? கூடாதா? என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..

பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது நிச்சயம் ஆரோக்கியமான ஒன்று தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதில் நிறையுற்ற கொழுப்பும், அதிக கலோரிகளும் உள்ளது. இது தான் பலருக்கும் சந்தேகத்தை உண்டாக்குகிறது.

டயட்டை பின்பற்றுவோர் பால் மற்றும் பால் பொருட்கள் எடுத்துக்கொள்வதை பெரும்பாலும் தவிர்த்து வருவார்கள். சாதாரண முறையில் உடல் எடையை குறைப்போருக்கு பால் குடிப்பதால் எடைக் கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.

குறைந்த கலோரி டயட்டை பின்பற்றுவோர் தினமும் 3 முறை பால் அல்லது பால் சார்ந்த உணவு பொருட்களை எடுத்துக்கொண்டதால் உடல் எடையை குறைக்க அதிகம் உதவுகிறது என்று கூறியுள்ளனர். எனவே பாலை தவிர்ப்பவர்களை விட பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிட்டு வருவோர் எளிதில் உடல் எடையை குறைக்கலாம்