தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலுவிற்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இயக்குநர் சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது, இதில் கலந்து கொண்டு பின் சென்னை திரும்பிய வடிவேலுவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வடிவேலுவின் தற்போதைய உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.








