தமிழ் சினிமாவில் பல வருடங்களாக அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் ஒரு காம்போ விஜய் – யுவன்.
இவர்கள் கூட்டணியில் இதுவரை ஒரே திரைப்படம் தான் வெளியாகியுள்ளது. அது கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது அப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததாலும், தேதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் மீண்டும் அதே கூட்டணி அமையாமல் போனது. விஜய் தொடர்ந்து தேவா, வித்தியாசகர், ரஹமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து வந்தார்.
இதனிடையே விஜய்யை சமீப காலமாக யுவனின் பாடல்கள் ஈர்த்துள்ளதாம். அவரை சந்தித்து வாழ்த்த வேண்டும் என விஜய் நினைத்திருந்தாராம். மாஸ்டர், பீஸ்ட் என விஜய் பிஸியானதால் இந்த சந்திப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்ததாம்.
பின் பீஸ்ட் ஷூட்டிங்கை முடித்து ப்ரீயாக இருந்த விஜய் யுவனிடம் பேசினாராம். பிறகு அடையாரில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்திருக்கிறார் யுவன். இருவரும் அரை மணி நேரம் மனம் விட்டு பேசியுள்ளனர்.
விஜய் நாம் இருவரும் சேர்ந்து பணிபுரிவோம் என்பது போல் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. அது தளபதி 67 அல்லது தளபதி 68 படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







