ஹோட்டலில் – இலங்கையின் பிரபல அமைச்சரின் குத்தாட்டம்

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் இலங்கையின் பிரபல அமைச்சர் ஒருவர் பெண் ஒருவருடன் நடனமாடும் காணொளி வைரலாகி வருகின்றது.

தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் வைரஸ் தொற்று இலங்கையில் தற்போது பரவ தொடங்கியுள்ள நிலையில் ஹோட்டல் ஒன்றில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) பெண் ஒருவருடன் நடனமாடும் காணொளி தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் சுகாதார அமைச்சரே இவ்வாறு சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் ஹோட்டல் ஒன்றில் அதிக மக்கள் இருக்கும் இடத்தில் பெண்ணொருடன் நடனமாடுவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.