ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த படம் வெளியானது. இப்படம் வசூலில் பல சாதனைகளை செய்தது.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது.
அதுமட்மின்றி, மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைவார் என்றும் திரை வட்டாரங்களில் கூறப்பட்டது.
இந்நிலையில், ரஜினிக்கு பிரபல பாலிவுட் இயக்குநர் ஆர்.பால்கி ஒரு சூப்பரான கதை சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டதாம். ரஜினி, ஆர்.பால்கி காம்போவில் இப்படம் உறுதியானால் இதற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைப்பாராம்.
இயக்குனர் பால்கி இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஷமிதாப் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் ரஜினிகாந்த், பால்கி படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.