திருகோணமலையில் பைசர் தடுப்பூசி நடவடிக்கைகள் ஆரம்பம்

திருகோணமலை கந்தளாய் பிராந்திய சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் கோவிட் மூன்றாவது பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கோவிட் மூன்றாவது பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று(19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளதாவும் கந்தளாய் சுகாதார சேவைகள் அலுவலகம் அறிவித்துள்ளது.

கந்தளாய் சுகாதார வேலைகள் அத்தியட்சகரின் அலுவலகத்தில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், 30 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் வகையான பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.