குறைந்த விலையில் மக்களுக்கு நிவாரண பொதி

எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு சதோச ஊடாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணப்பொதி நிதி அமைச்சர் பந்துல குணவர்தனவின்(Bandula Gunawardena) தலைமையில் நேற்று காலை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப்பொதி 1,998 ரூபாய் பெறுமதியானதென தெரியவந்துள்ளது.

அந்த பொதிக்குள், சுப்பர் சம்பா அரிசி 10 கிலோகிராம், 400 கிராம் நூட்ல்ஸ் ஒரு பக்கட், கருப்பு சீனி 2 கிலோ கிராம், நெத்தலி 200 கிராம், தேயிலை 100 கிராம், உப்பு 400 கிராம், வாசனை சவர்க்காரம் 1, ஆடை கழுவும் சவர்க்காரம் 1,  பப்படம் ஒரு பக்கட் ஆகியவை உள்ளடங்குகின்றது.

1998 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி அல்லது, 0115 201 998 என்ற WhatsApp இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்பி அல்லது சதோச இணையத்தளத்தில் இந்த பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

திங்கட்கிழமையில் இருந்து 48 மணித்தியாலங்களுக்குள் சேவை கட்டணமாக மேலதிகமாக 150 ரூபாய் செலுத்தி இந்த பொருட்களை வீட்டிற்கே கொண்டுவர முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.