சஞ்சிவ் குழந்தைக்காக ராஜு செய்த தியாகம்: கண்ணீருடன் நன்றி தெரிவித்த சஞ்சிவ்!

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனிலிருந்து தப்பிக்க போட்டியாளர்கள் பல டாஸ்க்குகளை செய்து வருகின்றனர்.

நேற்றைய தினத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அபினய் மற்றும் தாமரை, அமீர் மாட்டு சாணத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கினை பரபரப்பாக செய்தனர்.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சியில் மீதம் இருந்த மற்றவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அபினய் மற்றும் பிரியங்கா, ராஜு மற்றும் சஞ்சிவ், வருண் மற்றும் அக்ஷரா, அமீர் மற்றும் பாவனி என ஜோடி சேர்ந்துள்ளனர்.

இதில் ராஜு தனது விளையாட்டினை தியாகம் செய்து சஞ்சிவ் மகளின் ஆசையினை நிறைவேற்றியுள்ளார். இதனால் சஞ்சிவ் கண்ணீருடன் ராஜுவிற்கு நன்றி செலுத்தியுள்ளார்.