கொழும்பு பிரபல நகையகம் ஒன்றில் கத்திகுத்து

கொழும்பு – செட்டியார் தெரு பகுதியிலுள்ள பிரபல நகையகம் ஒன்றில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட பிரச்சினையே இந்த கத்தி குத்துக்கான காரணம் என தெரிய வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நகையகத்தில் இருந்த, இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.