பிரித்தானியாவில் கொரோனோ பாதிப்பு நிலவரம்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 51, 342 பேர் பாதிக்கப்பட்டதோடு 161 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 1 கோடியே 6இலட்சத்து 10ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 45 ஆயிரத்து 987 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 11 இலட்சத்து 24 ஆயிரத்து 581 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 880 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரித்தானியாவில் 39,692 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 93இலட்சத்து 40ஆயிரத்து 390 பேர் குணமடைந்துள்ளனர்.