ஒமிக்ரோன் தொடர்பில் புதிய கண்டு பிடிப்பு!

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரோன் தொடர்பில் தற்போது புதிய கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று வேகமாகப் பரவாது என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறையின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவின் விஞ்ஞான குழு ஒன்று இதனைக் கண்டு பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வைரஸானது தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்