அவுஸ்ரேலியாவில் முதல் பரிசை பெற்ற தமிழ் சிறுமி!

அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஆங்கிலத்தில் எழுத்து கூட்டி சரியாக உச்சரிக்கும் பிரதமரின் தேசிய போட்டியில் தமிழ் சிறுமி ஒருவர் பாராட்டுக்களையும் பரிசுகளையும் பிரதமரிடமிருந்து பெற்றுள்ளார்.

11 வயது மேற்படி சிறுமியான தீக்சிதாம்(Deekshita) என்பவரே இவ்வாறு அவுஸ்ரேலியா பிரதமரிடம் இருந்து பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றவராவார். மேலும் இந்த போட்டி 5-6 பிரிவில் மேற்படி சிறுமி வெற்றி பெற்றுள்ளார்.

மெல்போர்னில் வசிக்கும் தீக்சிதா, (Deekshita) குறித்த போட்டியில் 30 சொற்களில் 29 சொற்களை சரியாக எழுத்துகூட்டி உச்சரித்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

குறித்த போட்டியில் 500 பாடசாலைகளில் இருந்து 21 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். தேசிய ரீதியில் வெற்றிபெற்ற மூவருக்கும் ipads, புத்தகங்கள்,1000$ கூப்பன்கள் வழங்கப்பட்டன.