வெளியாகவுள்ள புஷ்பா ட்ரெயிலர்.! ஏற்கனவே சாதனை படைத்த பாடல்.!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் “சாமி சாமி” பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த புஷ்பா படத்தின் டிரெய்லர் நாளை டிசம்பர் 6 வெளியாகவுள்ளது.