சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வெட்டுக்காடு பொதுச்சுகாதார பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மூன்று உணவகங்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் கிஷான்தராஜ் தலைமையில் நேற்று இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதி உட்பட பல இடங்களில் உள்ள உணவகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற தவறிய மூன்று உணவகங்களுக்கு வழங்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் இரண்டு உணவகளுக்கு தலா 10.000ரூபா, 70.0000 ரூபா தண்டப்பனம் விதிக்கப்பட்டுள்ளது.