வெளிநாடொன்றில் ஆசிரியரை தாக்கிய மாணவன்

பிரான்ஸின் பாரிஸ் மாகாணத்தில் ஆசிரியர் ஒருவர் மீது மாணவன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் பாரிஸின் 6 ஆம் வட்டாரத்தில் உள்ள Lycée Montaigne இல் இடம்பெற்றுள்ளது. முதலில் ஆசிரியரின் தலையில் இடித்த மாணவன் பிறகு அவரது முகத்தில் பல தடவைகள் தாக்கியுள்ளான்.

மேலும் பல மாணவர்களையும் அவன் கொடூரமாக தாக்கியுள்ளான். லீசேயின் உயர் தரத்தில் படிக்கும் மாணவர்கள் சிலர் சத்தம் கேட்டு வகுப்பறைக்குள் நுழைந்தனர். அங்கு ஆசிரியர் முகத்தில் இரத்தம் வழிய மயங்கி கிடப்பதை கண்டு அவச உதவியினை அழைத்துள்ளனர்.

இதனையடுத்து அவர் பாரிஸில் உள்ள கொச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் குறித்த மாணவனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.