பிரான்சில் வாகனத்தில் சிக்குண்டு பலியான பெண்!

பணிக்காக தனது மிதிவண்டியில் சென்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் கன ரக வாகனத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Essonne மாவட்டத்தின் Vigneux-sur-Seine நகரில் இடம்பெற்ற சம்பவத்தில் 50 வயது பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் போது தனது மிதிவண்டியில் சென்றபோது குறித்த பெண் எதிர்ப்பட்ட கனரக வாகனத்துடன் மோதியுள்ளார்.

அவர் 15 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதாகவும், படுகாயமடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கனரக வாகனத்தை செலுத்திய சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.